ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’ திரைப்படம்!

ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’ திரைப்படம்!

நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘டெடி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா ‘டெடி’ என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். சயீஷா கதநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் அனிமேஷன் செய்யப்பட்டவையாக உள்ளது.

ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’ திரைப்படம்!

கடந்த வருட ஆரம்பத்திலேயே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதையடுத்து இந்தப் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது டெடி திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் மார்ச் 19-ம் தேதி வெளியாகவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஆர்யா ‘எனிமி’ படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார்.

Share this story