‘உங்க அரசியலை என்கிட்ட வைச்சிகாதீங்க’.. மிரட்டல் நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகை வனிதா !

vanitha

 தன்னை மிரட்டும் வகையில் பேசும் மர்ம நபர்களுக்கு நடிகை வனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனின் வின்னர் யார் என்ற கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த இறுதிப்போட்டியில் அசீம் மற்றும் விக்ரமன் இடையே போட்டி நிலவுகிறது. இதற்கிடையே பிக்பாஸில் வெற்றி பெற விக்ரமுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் விக்ரமுக்கு வாக்களிப்போம். அறம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

vanitha

குறிப்பாக நடிகை வனிதா இந்த பதிவை கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.. இது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட். ஒரு அரசியல் தலைவர், எம்.பியாக இருக்கும் அவர், ரியாலிட்டி ஷோவில் போட்டியிடும் போட்டியாளருக்கு வாக்களிக்க எப்படி தனது உறுப்பினர்களை நிர்ப்பந்திக்கலாம் என கேட்டிருந்தார். 

vanitha

இந்த பதிவால் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவில், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலுக்கு மிரட்டல் விடுத்து என்னை எச்சரிக்க முயல்கிறாரார்கள். யாருக்காகவும், எதற்காகவும் பயப்படாதவள் நான். உங்கள் அரசியல் புத்தி என்ன என்று காலம் காலமாக பாத்து வருகிறோம். நிறைய மக்களுக்கு நல்லது செய்து முன்னேற்ற பாருங்க. உங்க அரசியல் எல்லாம் என்னிடம் வைச்சிகாதீங்க என்று அவர் தெரிவித்துள்ளார். 


 

 

 

 

Share this story