தாத்தாவான கோபி.. கடுப்பாகும் ராதிகா.. செம்ம காமெடியாக போகும் ‘பாக்யலட்சுமி’ சீரியல்

Baakiyalakshmi

‘பாக்யலட்சுமி’ சீரியல் மிக காமெடியாக செல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

கடந்த சில மாதங்களாக உச்சக்கட்ட பரபரப்பாக சென்றுக் கொண்டிருந்த சீரியல் ‘பாக்யலட்சுமி’. தனது அப்பாவி மனைவியை கைவிட்டு தனது தோழியான ராதிகாவை கோபி திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு கோபி வாழ்க்கையில் என்ன மாதிரியான திருப்பங்கள் ஏற்படுகிறது என்பது தற்போதைய கதைக்களம். 

Baakiyalakshmi

அதன்படி தனது வீட்டில் மிகவும் சொகுசாக வாழ்ந்த வந்த கோபி, ராதிகாவிடம் படாதபாடு பட்டு வருகிறார். ஒரு காபிக்கு கூட ராதிகாவிடம் கொஞ்சி வருகிறார். தெரியாமல் ராதிகாவிடம் மாட்டிக் கொண்ட கோபியின் நிலைமையை பார்த்து ரசிகர்களே ஃபீல் பண்ணி வருகின்றனர். 

Baakiyalakshmi

மற்றொரு புறம் சொன்ன மாதிரியே பாக்யா தனது பணத்தை கோபியிடம் கொடுத்துவிட்டார். இதற்கிடையே பாக்யாவின் மூத்த மகனான செழியனின் மனைவி ஜெனி கர்ப்பமாகிறார். இதனால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். இந்நிலையில் கோபியை வெறுப்பேற்றும் விதமாக கோபியின் அப்பாவின் கோபி மற்றும் ராதிகாவிற்கு இனிப்பு வழங்குகிறார். அதோடு கோபி தாத்தாவாகிவிட்டதாக கூறுவதால் ராதிகா கடுப்பாகும் காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. 


 

Share this story