பாரதி எடுத்த அதிரடியான முடிவு.. பரபரப்பான கட்டத்தில் பாரதி கண்ணம்மா !

BarathiKannamma

 பாரதி எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பான திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மீண்டும் பரபரப்பை கூட்டியுள்ளது. நீண்ட நாட்களாக டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் கதை நகர்ந்து வந்த நிலையில் சமீபத்தில் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தார் பாரதி. அப்போது கண்ணம்மா எந்த தவறும் செய்யவில்லை. ஹேமா, லஷ்மி ஆகிய இருவரும் தனது குழந்தைகள் தான் என பாரதி தெரிந்துக் கொண்டார். 

BarathiKannamma

இதையடுத்து கண்ணம்மாவிடம் அனைத்து உண்மையையும் கூறும் பாரதி, சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். ஆனால் கண்ணம்மா அதை வேண்டாம் என மறுக்கும் நிலையில் தனது சொந்த ஊருக்கு செல்கிறார். கண்ணம்மாவை தேடி பாரதியும் அங்கு செல்ல எப்படியாவது கண்ணம்மாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால் எந்த முயற்சியும் பலிக்காத நிலையில் விவாகரத்து நோட்டீஸ் கொடுத்து பாரதியை அதிர்ச்சிக்குள்ளாகிறார். 

இதையடுத்து இன்றைய எபிசோடில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அங்கு பாரதியிடம் இருந்து கண்ணம்மா விவாகரத்து கேட்கிறார். அப்போது பாரதி விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று நினைத்த நிலையில் கண்ணம்மாவின் விவாகரத்து கோரிக்கையை ஏற்கிறார். இவரின் கருத்தை கேட்ட நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்குகிறது. இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. நீதிமன்றத்திற்கு வெளியே வரும் கண்ணம்மா, எனது வாழ்க்கைக்கு எது தேவையோ அதைதான் செய்திருக்கிறேன் என்று கூறினார். அப்போது உன்னை மிகவும் விரும்புகிறேன். அதனால் தான் விவாகரத்துக்கு ஒத்துக் கொண்டேன் என்று பாரதி கூறுகிறார். இது சீரியலில் உருக்கத்தை ஏற்படுத்துகிறது. 


 

Share this story