பாரதியை கிழி கிழின்னு கிழித்த கண்ணம்மா... செம்ம ட்விஸ்ட் இருக்கு போல !

BarathiKannamma

பாரதி கண்ணம்மாவில் பாரதியை கண்ணம்மா கிழித்து தொங்கவிடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் சென்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்த சீரியலை முடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் கதைக்களம் இறுதிக்கட்டத்தை நோக்கியே சென்றுக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் எதிர்பார்த்த டிஎன்ஏ டெஸ்டை எப்படியோ பாரதி எடுத்துவிட்டார். 

BarathiKannamma

அதனால் எப்படியாவது பாரதிக்கு உண்மை தெரிந்துவிடும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தொழில்நுட்ப பிரச்சனை ரிசல்ட் கிடைக்க சில நாட்கள் ஆகும் என்று சொல்லி கதையை வளர்த்து வருகின்றனர். மறுபுறம் வெண்பாவின் திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் எப்படியோ ஏமாற்றிவிட்டு மண்டபத்தை விட்டு தப்பித்து விடுகிறார் வெண்பா. 

BarathiKannamma

இதனால் திருமண மண்டபமே பரபரப்பாக இருக்க, வேலைக்கார பெண் வெண்பா, பாரதியை திருமணம் செய்ய கோவிலுக்கு சென்றிருக்கிறார் என்று கூறுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைக்கின்றனர். இதையடுத்து கோவிலுக்கு செல்லும் கண்ணம்மா, பாரதியை சராமாரி கேள்வியை கேட்கிறார். இதனால் பாரதி அதிர்ச்சி அடைகிறார். அதேபோன்று வெண்பாவின் கருவில் வளரும் குழந்தைக்கு அப்பா ரோகித் தான் என்ற உண்மையும் வெளிச்சத்திற்கு வருகிறது. இதனால் இந்த சீரியல் தற்போது பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. 


 

Share this story