பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்பு பட நாயகி.. கொண்டாட்டத்தில் ஹவுஸ்மேட்டுகள் !

bigboss ultimate hansika

பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு தென்னிந்தியாவின் பிரபல நடிகை வந்திருப்பது ஹவுஸ்மேட்டுகளை உற்சாகப்படுத்தி உள்ளது. 

ஒடிடியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியாளராக பாலா, நிரூப், தாமரை, ரம்யாபாண்டியன், ஜூலி, அபிராமி உள்ளிட்டோர் உள்ளனர். இவர்களில் யார் டைட்டிலை வெல்ல போகிறார் என்ற பரபரப்புடன் நிகழ்ச்சி சென்றுக்கொண்டிருக்கிறது. 

bigboss ultimate hansika

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களும், கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அதனால் பிக்பாஸ் வீடே களைக்கட்டியுள்ளது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த ரசிகர்கள் ரொம்பவும் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். அதனால் அடுத்தடுத்து ரசிகர்களை மகிழ்விக்க பல விஷயங்களை பிக்பாஸ் குழு செய்து வருகிறது. 

bigboss ultimate hansika

இந்நிலையில் நடிகை ஹன்சிகா, பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஹவுஸ்மேட்டுகள் மகிழ்ச்சியில் திளைத்து வரும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் எம்.ஒய் 3 வெப் தொடர் விரைவில் டிஸ்னிப்ளஸ் ஹார்ட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த வெப் தொடரின் ப்ரோமோஷனுக்காக ஹன்சிகா பிக்பாஸ் அல்மேட்டிற்கு வந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


 

Share this story