பிரம்மாண்டமாக நடக்கும் பிக்பாஸ் சீசன் 6 கிராண்ட் ஃபினாலே... கோலாகல ப்ரோமோ வெளியீடு !

biggboss 6

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

biggboss 6

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும், சுவாரஸ்சியமாகவும் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா நந்தினி, ஷிவின், ஜிபி முத்து, கதிரவன், அசல் கோலார், ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், ஷெரின் சாம், மணிகண்டன், சாந்தி, ரச்சிதா உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர்.‌

biggboss 6

வழக்கம் போல் கலகலப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சண்டைகள், சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஆகியவை இருந்தன. இதையடுத்து ஒவ்வொருவரின் தரத்தை பரிசோதனை செய்ய ஒவ்வொரு வாரமும் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. இதில் சரியாக விளையாடாத போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் எலிமினேட் செய்யப்பட்டனர். 

biggboss 6

இறுதியாக அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா, ஷிவின் ஆகிய 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் அமுதவாணன் 11.75 லட்சம் பணத்துடன் வெளியேறிவிட்டார். மைனா நந்தினி இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இறுதியாக மூவர் இருக்கும் நிலையில் விக்ரமன் மற்றும் அசீம் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் யார் பிக்பாஸ் வின்னராக மாறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

biggboss 6

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நாளையுடன் நிறைவுபெற உள்ளது. இதையொட்டி இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை நடைபெறது. இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை மாலை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 


 

Share this story