பிக்பாஸ் சீசன் 6-ல் இந்த வாரம் இவர்தான்... கசிந்த புதிய தகவல் !

ayesha

பிக்பாஸ் சீசன் 6-ல் இந்த வாரம் யார் வெளியேறவுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. 

சண்டை, சச்சரவு, மோதல் என பல அதிரடி திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் 6. இன்றைய தினத்தில் அசீம் மற்றும் மகேஸ்வரி, குயின்சி மற்றும் ஜனனி என பரபரப்பாகவே சென்றது. இதனால் பிக்பாஸ் வீடே களவரமாகி ரசிகர்களுக்கு தீனிப்போடும் களமாக மாறிவிட்டது. 

ayesha

இதற்கிடையே ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் தனது குடும்பத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி ஜிபி முத்து வெளியேறினார். அதன்பிறகு சாந்தி, அசல் கோலார் என அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டனர். 

தற்போது இந்த வார நாமினேனில் விக்ரமன், அசீம், கதிரவன், ஆயிஷா, ஷெரீனா ஆகிய 5 பேர் உள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் அதிக வாக்குகள் பெற்று அசீம் மற்றும் விக்ரமன் முன்னிலையில் இருக்கின்றனர். ஆனால் குறைந்த வாக்குகளை ஆயிஷா பெற்றிருப்பதால் இந்த வாரம் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. 

Share this story