காதலரை வித்தியாசமாக அறிவித்த பிக்பாஸ் ஆயிஷா... விரைவில் திருமணமா ?

ayesha

தனது காதலரை வித்தியாசமான முறையில் பிக்பாஸ் ஆயிஷா அறிவித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 

ஜீ தமிழில் ஒளிப்பரப்பான 'சத்யா' சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் பிரபல  நடிகையாக மாறியவர் ஆயிஷா. போலீஸ் கதாபாத்திரத்தில் ஆண் இயல்பு கொண்ட பெண்ணாக நடித்து ரசிகர்களை மிரட்டியிருந்தார். அந்த சீரியல் கடந்த ஆண்டு முடிந்த நிலையில் எப்போது அடுத்த சீரியலில் நடிப்பார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

ayesha

சத்யா சீரியலுக்கு பிறகு சமீபத்தில் நிறைவுபெற்ற பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக பங்கேற்றார். சிறப்பாக விளையாடிய ஆயிஷாவிற்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு தந்தனர். அசீம் போன்ற போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தார். டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். 

ayesha

இதையடுத்து பிக்பாஸில் இருந்து வெளியேறும் போது சக போட்டியாளர்களிடம் பேசிய ஆயிஷா, விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும், காதலரை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் ஒருவரின் முகம் தெரியாதபடி கட்டிப்பிடித்து புகைப்படம் ஒன்றை ஆயிஷா வெளியிட்டுள்ளார். அதில் தனது காதலனை அறிமுகப்படுத்தும் விதமாக ஹார்டின் சிம்பிள் ஒன்றை காட்டியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இது ஆயிஷாவின் காதலா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரம் இது புதிய சீரியலின் ப்ரோமோஷன் என்று கூறப்படுகிறது. 

 

 

Share this story