‘சந்திரலேகா’ சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகர்... இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு !

serial actor arun rajan

‘சந்திரலேகா’ சீரியலில் இருந்து பிரபல நடிகர் ஒருவர் விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் ராஜன். இளவரசி சீரியல் மூலம் அறிமுகமான இவர், அழகி, சந்திரலேகா, வாணி ராணி, கல்யாண பரிசு, அழகி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கு சின்னத்திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

serial actor arun rajan

தற்போது சன் டிவியில் பிரபல சீரியலாக ஒளிப்பரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலில் அருண் ராஜன் நடித்து வருகிறார். சபரிநாதன் என்ற இவரின் கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் மதியம் 2 மணி முதல் 2.30 வரை ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து அருண் ராஜன் விலகியுள்ளார். 

serial actor arun rajan

இது குறித்து இன்ஸ்கிராமில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 7 ஆண்டுகளாக சபரிநாதன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. இனிமேல் சந்திலேகா சீரியலில் நான் நடிக்க மாட்டேன். எனக்கு பதிலாக அஸ்வின் குமார் என்பவர் நடிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் அருண் ராஜன், சந்திரலேகா சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

 

Share this story