‘செல்லம்மா’ சீரியலில் இருந்து விலகியது ஏன் ?.. மனம் திறந்த திவ்யா கணேஷ் !
‘செல்லம்மா’ சீரியலில் இருந்து விலகியது ஏன் என்று நடிகை திவ்யா கணேஷ் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் திவ்யா கணேஷ். விஜய் டிவியில் ரசிகர்களின் ஆதரவை பெற்று விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்கள் செல்லம்மா மற்றும் பாக்யலட்சுமி. இந்த இரு சீரியல்களிலும் ஒரே நேரத்தில் இருவேறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரது கதாபாத்திரங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கிடையே ‘செல்லம்மா’ சீரியலில் இருந்து திடீரென விலகிவிட்டதாக தகவல் வெளியானது. இதற்கு காரணம் அந்த சீரியலின் நாயகன் அர்னவ் தான் என்றும், டிஆர்பி குறைந்ததால் விலகிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் செல்லம்மா சீரியலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் செல்லம்மா சீரியல் குழுவினர் என்னை தொந்தரவு செய்துக் கொண்டே இருந்தனர். படப்பிடிப்பில் நிம்மி என்பதே இல்லை. அதனால் தான் சீரியலில் இருந்து விலகினேன். அதேநேரம் பாக்யலட்சுமி சீரியலில் தொடர்ந்து ஜெனியாக நடிப்பேன் என்று கூறினார்.