'பாக்கிய லெட்சுமி' சீரியலில் புது ராதிகா யார் தெரியுமா? – வில்லங்க கதாபாத்திரத்திற்கு வரும் விவகார நடிகை.

photo

பிரபல தொலைகாட்சியில் இல்லத்தரசிகளின் விருப்பமான சீரியலாக வலம்வரும் ‘பாக்கியலெட்சுமி’ தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் வரும் ரேஷ்மா, சீரியலில் இருந்து விலக போவதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இவரது வில்லங்க கதாபாத்திரத்திற்கு விவகாரமான நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

photo

photo

வாரிசு நடிகையாக இருந்தாலும் இவர் பிரபல ரியாலிட்டி ஷோக்களின் மூலமாகதான் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம் பிக்பாஸ், குக்வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோக்கள், சில தொலைக்காட்சி தொடர் மூலமாக அறியப்பட்ட வனிதா விஜயகுமார் தான், தற்போது பாக்கியலெட்சுமி தொடரின் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க போவதாக  தகவல் கசிந்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சபாஷ் சரியான ஆள்தான் இவர் என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

photo

வனித்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் கசிந்துள்ளது.  டிஆர்பியில் சக்க போடு போட்டு, மற்ற தொடர்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் இந்த சீரியல், வனித்தாவின் வருகைக்கு பிறகு உச்சகட்டத்தை எட்டும் என்பது சீரியல் பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

photo

Share this story