பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிரபல நடிகை... உற்சாகமான ஹவுஸ்மேட்டுகள் !

aiswarya rajesh

பிக்பாஸ் வீட்டிற்கு பிரபல நடிகை ஒருவர் வந்ததால் போட்டியாளர்கள் உற்சாகமடைந்தனர். 

ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். இதை வைத்து தான் போட்டியாளர்களின் தனி திறமைகள் வெளிப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் Freeze டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. 

aiswarya rajesh

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது எந்த வித அசைவும் இல்லாமல் இருக்கவேண்டும். அதன்படி போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினரும் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் மணிகண்டனின் அம்மா, மனைவி, மகன் ஆகியோர் மெயின் டோர் வழியாக வருகின்றனர். இதனால் இன்ப அதிர்ச்சி அடைகிறார் மணிகண்டன். 

aiswarya rajesh

இதையடுத்து மணிகண்டனின் தங்கை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்பெக்ஷன் ரூம் வழியாக என்ட்ரி கொடுக்கிறார். அவரை பார்த்ததும் பிக்பாஸ் போட்டியாளர் உற்சாகத்தில் கத்துகின்றனர். உள்ளே வந்தவுடன் போட்டியாளர்களிடம் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ், நீங்க என்னதான் சண்டை போட்டாலும் சாப்பிடும் போது ஒன்றாக சாப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். அப்போது ரூல்ஸ் போடவே ஒரு சண்டை நடக்கும் என்று கலாய்க்கின்றனர். 

பின்னர் வாத்திங் கம்மிங் பாடலுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது அம்மா, மணிகண்டன் மற்றும் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாக டான்ஸ் ஆடுகின்றனர். இது குறித்து வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 


 

 

 

Share this story