வளைகாப்பு முடிந்தும், சைலண்டாக இருக்கும் பிரபல செய்திவாசிப்பாளர் கண்மணி.

photo

சன்டிவியில் பிரபல செய்திவாசிப்பாளராக இருக்கும் கண்மணிக்கும், சீரியல் நடிகரான நவீனிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கண்மணி கர்பமாக இருப்பதாக செய்திகள் உலாவந்தது, இது குறித்து அவரிடம் ரசிகர்கள் கேட்ட நிலையில், பதில் எதிவும் கூறாமல், சிரிக்கு எமோஜியை பதிலாக கொடுத்திருந்தார். ஆனால் தற்போது கண்மணிக்கு வளைகாப்பே முடிந்துள்ளது. அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

photo

photo

செய்திவாசிப்பாளர்கள் ட்ரெண்டடித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறதுஅந்த வகையில் ஜெயா டிவி, காவேரி நியூஸ், நியூஸ் 18 தமிழ்நாடு ஆகிய தொலைகாட்சிகளில் செய்திவாசிப்பாளராக இருந்து தற்போது சன் டிவியில் பணியாற்றிவருகிறார் கண்மணிஇவருக்கு ரசிகர்கள் ஏராளம், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம். இவருக்கும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்' இதயத்தை திருடாதே' தொடரில் சிவா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்ற நவீனிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதனை தொடர்து பலருமே இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

photo

அந்தவகையில் இந்த புத்தாண்டை தம்பதி கேக்வெட்டி, கடந்த வருடத்தின் தங்கள் வாழ்வில் நடந்த  நினைவுகளை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தில் கண்மணியை பார்த்தால் கைகள் நிறைய வளையல் அணிந்து வளைகாப்பு முடிந்துள்ளது நன்றாக தெரிகிறது.

Share this story