மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பிய பிரபல சீரியல் நடிகை.. எந்த சீரியல் தெரியுமா ?

swetha

பிரபல சீரியல் நடிகையான ஸ்வேதா மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பியுள்ளார். 

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘வானத்தை போல‘. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் தமனும், தங்கை துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதாவும் நடித்து வந்தனர். 

vanathai pola

இந்த சீரியல் ஒளிப்பரப்பான சில எபிசோடுகளிலேயே துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வேதா விலகிவிட்டார். அதன்பிறகு திரைப்பட வாய்ப்பு தேடி வந்தார்.  தமிழ் சீரியல்களை தவிர, தெலுங்கு, கன்னட மொழி சீரியல்களிலும் ஸ்வேதா நடித்துள்ளார். அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

vanathai pola

இந்நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி வந்துள்ளார். விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ள ‘கண்ணதிரே தோன்றினாள்’ சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடிக்கிறார். இவருடன் இணைந்து மாளவிகா அவினாஷ்முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஸ்வேதா மீண்டும் சீரியலுக்கு வந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story