'கயல்' சீரியலில் இருந்து விலகிவிட்டாரா சஞ்சீவ்? – அவரே போட்ட இன்ஸ்டா ஸ்டோரி.

photo

 சன்டிவியில் பல சீரியலகள் ஒளிபரப்பானாலும் ரசிகர்களின் மனதை சில சீரியல்களே கவருகின்றன. அந்த வரிசையில் ‘கயல்’ சீரியலுக்கு எப்போது ஒரு தனி இடம் உண்டு. இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி கயல் கதாபாத்திரத்திலும், நடிகர் சஞ்சீவ், எழில் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்திவருகின்றனர்.  கயல் தனது குடும்பத்தை காப்பாற்றும் ஒரு சாதாரண மிடில்கிளாஸ் செவிலியராக நடித்து வருகிறார். அன்பு, பாசம், போட்டி, பொறமை, காதல் என இந்த சீரியல் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது.  அந்த வகையில் கயல், எழில் ரொமான்ஸ் டிராக் இன்னும் சீரியலில் துவங்கவில்லை, அதை எதிர்நோக்கிதான் ரசிகர்கள் காத்துள்ளனர். தற்போது சீரியலிலிருந்து சஞ்சீவ் விலகபோவதாக செய்திகள் சமூக வலைதளத்தில் பரவி வந்தது.

photo

அதற்கு ஏற்றார்போல சில நாட்களாக சஞ்சீவை சீரியல் பக்கம் காணவே இல்லை. ஒரு வேலை இது உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் நினைத்துகொன்டிருந்த இந்த சமயத்தில் தான் சஞ்சீவின் இன்ஸ்டா ஸ்டோரி ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளதுஇதோ அதனை நீங்களே பாருங்கள்:

photo

எது எப்படியோ சஞ்சீவ் சீரியலிலிருந்து விலகுவது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், சஞ்சீவ் இந்த சீரியலை விட்டு விலகுவதாக வெளியானது வதந்தியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடி துபாய்க்கு வெகேஷன் சென்றுள்ளதால், விரைவில் சீரியல் தொடரில் இணைவார் என கூறப்படுகிறது.

photo 

Share this story