அடேங்கப்பா.. மணிகண்டனை செம்மையாய் கலாய்த்த கமல் !

biggboss 6

நல்லவர் என்ற முகமூடியை அணிந்திருக்கும் நபர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்காத மணிகண்டனை கமல் கலாய்க்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss 6

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் முழுவதும் பேக்டரி டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வந்தனர். இந்த டாஸ்க்கில் அமுதவாணன் ஒரு அணியாகவும், விக்ரமன் ஒரு அணியாகவும் விளையாடினர். இதில் அமுதவாணன் மற்றும் விக்ரமன் இடையே பயங்கரமான சண்டை நடைபெற்றது. இது குறித்து கமல் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

biggboss 6

இந்நிலையில் இன்றைய தினத்தின் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ட்ருத் அல்லது டார் டாஸ்க்கில் நல்லவர் என்ற முகமூடி அணிந்திருக்கும் நபர் யார் என்று மணிகண்டனை கமல் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் மணிகண்டன், இந்த வீட்டில் அப்படி யாரும் இல்லை என்று சொல்ல, அடேங்கப்பா என்று கமல் கிண்டடிக்கும் காட்சிகள் ப்ரோமோவில் உள்ளது. 

biggboss 6

 இதையடுத்து அமுதவாணனிடம் இது குறித்து கமல் கேட்க, மணிகண்டனே சொல்லட்டுமே சார் என்று நழுவுகிறார். இதைத்தொடர்ந்து மணிகண்டனிடம் பேசும் கமல், இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக நினைக்காதீர்கள் என்று மணிகண்டனை கமல் எச்சரிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 


 

Share this story