அதிரடி திருப்பங்களுடன் 'கண்ணான கண்ணே'... புதியதாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை !
சன் டிவியின் 'கண்ணான கண்ணே' சீரியலில் பிரபல நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
சன் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் 'கண்ணான கண்ணே'. தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த 'பெளர்ணமி' என்ற சீரியலை தழுவி ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலை ஏராளமான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்த சீரியலில் நிமிக்ஷிதா, ராகுல் ரவி, பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் நிமிக்ஷிதா மீரா கதாபாத்திரத்திலும், ராகுல் ரவி, யுவா கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து வருகின்றனர். பிரசவத்தின்போது தனது மனைவி இறப்பதால் மகளை வெறுக்கிறார் அப்பா. மற்றொருபுறம் அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகள் என கதைக்களம் அமைக்கப்பட்டு இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

தற்போது இந்த சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை சாக்ஷி அகர்வால் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார். அடுத்த வரும் எபிசோடில் இவரின் கதாபாத்திரம் என்ட்ரியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சாக்ஷி அகர்வால் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

