மீண்டும் முட்டிக்கொண்ட மகேஷ்வரி - அசீம்.. பரபரப்பான ப்ரோமோ வெளியீடு !

biggboss 6

மகேஷ்வரி மற்றும் அசீம் இடையே மீண்டும் மோதல் உண்டான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

கொஞ்சமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 6. தற்போது இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அவர்கள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். அதேநேரம் இந்த வாம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார் என்ற பதட்டமும் போட்டியாளர்களிடம் இருக்கதான் செய்கிறது.

biggboss 6 

ஒவ்வொரு வாரம் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் போட்டியாளர் இரு பிரிவுகளாக பிரிந்து ஸ்வீட் கடை ஒன்றை நடத்தி தங்களது பொருட்களை விற்பனை செய்யவேண்டும். அதன்படி விக்ரமன் தலைமையில் ‘அடை தேனடை’ அணியும், அமுதவாணன் தலைமையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற அணியும் செயல்பட்டு வருகிறது. 

biggboss 6

இந்நிலையில் இன்றைய தினத்தில் வெளியான 3வது ப்ரோமோவில், விக்ரமனும், மகேஸ்வரியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த அசீம், வழக்கம் போல் குறுக்கிட்டு மகேஸ்வரியிடம் சண்டை போடுகிறார். அப்போது அசீமை கத்தாதீங்க என விக்ரமன் சொல்ல, இதையெல்லாம் கேட்காத அசீம், மகேஸ்வரியிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார. இதனால் பிக்பாஸ் வீட்டில் சிறிறு நேரம் பரபரப்பாகிறது.  

Share this story