மார்பகத்தில் கடுமையான வலி... பதறிப்போன 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை !

hema rajkumar

மார்பகத்தில் கடுமையான வலி ஏற்பட்டதால் பதறிப்போனதாக சீரியல் நடிகை ஹேமா தெரிவித்துள்ளார். 

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் ஹேமா ராஜ்குமார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது நடித்து வருகிறார். மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. அண்ணன் தம்பிகள் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'. 

 hema rajkumar

இந்த சீரியலில் முதல் தம்பியின் மனைவியாக ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார். அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் இரண்டாவது மருமகளாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த மீனா கதாபாத்திரத்தின் தந்தை தான் சீரியலின் வில்லனாக நடித்து வருகிறார். தனது தந்தையை எதிர்த்து குடும்பத்திற்காக மீனா போராடி வருவது இந்த கதாபாத்திரத்திற்கான வரவேற்புக்கு காரணம்.‌

இதற்கிடையே தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடிகை ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார். அதில் தனக்கு மார்பகத்தில் கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் சில மாதங்களுக்கு முன்பு அகற்றினேன். இதையடுத்து மாதந்தோறும் பரிசோதனை மேற்கொண்டு வந்தேன். ஆனால் கடந்த சில மாதங்களாக பணியின் காரணமாக பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை. அதனால் திடீரென மார்பகத்தில் வலி ஏற்பட்டது. இது எனக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் அது வெறும் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் வலி என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு நிம்மதி பெருமூச்சி விட்டேன். பொதுவாக பெண்கள் மார்பக பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெண்களின் விழிப்புணர்வுக்காக இந்த வீடியோவை நான் வெளியிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். 

 

Share this story