செருப்பால அடிப்பேன்.. தனலட்சுமியிடம் பொங்கிய ராபர்ட் மாஸ்டர்.. தொடங்கியது அடுத்த பஞ்சாயத்து !

biggboss

தனலட்சுமியை செருப்பால அடிப்பேன் என்று ராபர்ட் மாஸ்டர் கூறிய காட்சிகள் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததிருந்து தனலட்சுமியை வைத்தே இந்த நிகழ்ச்சி தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. முதலில் ஜிபி முத்துவுக்கு தனலட்சுமிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதன்பிறகு அவர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். இதையடுத்து கடந்த வாரம் முழுவதும் அசீம் மற்றும் தனலட்சுமி இடையே பிரச்சனை இருந்தது. இந்த பிரச்சனையில் கமல், அசீமை கண்டித்தார். 

dhanalakshmi

தற்போது அடுத்த பஞ்சாயத்து தொடங்கிவிட்டது. அதன்படி தனலட்சுமியை ராபார்ட் மாஸ்டர் செருப்பால அடிப்பேன் என்று கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பகல் நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த தனலட்சுமியை பார்த்து, எழுந்துவிடு பகலில் தூங்காதே என்று ராபார்ட் மாஸ்டர் கூறுகிறார். அதற்கு நான் என்ன செய்கிறேன் என்று பார்ப்பதுதான் உங்க வேலையா என தனலட்சுமி பேச, அதற்கு யாரை நீ சொல்கிறாய். செருப்பால அடிப்பேன் என்கிறார். அப்போது நான் உங்களைதான் சொல்கிறேன் என்று போல்டாக தனலட்சுமி சொல்கிறார். 

dhanalakshmi

இதையடுத்து இருவரிடையே சண்டை தொடங்கியது. நாயை பார்த்து நாய் குரைக்க போகிறது என்று ராபர்ட் சொல்ல, ரொம்ப பேசுறீங்க, நான் நாயகவே இருந்துட்டு போறேன் என தனலட்சுமி கூறுகிறார். அசீம் பிரச்சனைக்கு பிறகு தனலட்சுமி - ராபர்ட் மோதல் அதிகரித்து வருகிறது. அப்படியென்றால் இந்த வார குறும்படம் இவர்களில் ஒருவருக்காக தான் இருக்கும் என தெரிகிறது. 


 

 

 

Share this story