‘ரோஜா’ சீரியல் நடிகையின் புதிய சீரியல்.. எந்த சேனல்லன்னு தெரியுமா ?

priyanka

ரோஜா சீரியல் நடிகை புதிய சீரியல் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் பிரியங்கா நல்காரி. தமிழில் சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘ரோஜா’ சீரியல் மூலம் அறிமுகமானார். தனது முதல் சீரியலிலேயே ரசிகர்களின் அன்பை பெற்றார். அதற்கு காரணம் ப்பாவி தனமாக இவர் பேசும் விதம், நடிப்பு, சற்று பப்ளியாக இருக்கும் இவரது  தோற்றம் ஆகியவை தான். 

priyanka

சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலான ஒளிப்பரப்பாகி வந்த ‘ரோஜா’ சீரியல் கடந்த ஆண்டு நிறைவுபெற்றது. இதனால் சீரியலிருந்து பிரியங்கா நல்காரி விடைப்பெற்றார். பிரியங்கா நல்காரியை பார்க்காமல் ரசிகர்கள் சோர்வடைந்தனர். அதனால் அவர் அடுத்து எப்போது சின்னத்திரையில் தோன்றுவார் என்று அனைவரும் ஆர்முடன் காத்திருந்தனர். 

priyanka

இந்நிலையில் புதிய சீரியல் ஒன்றில் நடிகை பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள ‘சீதாராமன்’ தொடரில் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலின் கதாநாயகனாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ தொடரின் மூலம் பிரபலமான ஜெய் டிசவுசா நடிக்கிறார். கன்னடத்தில் பிரபலமான ‘சீதா ராமா’ சீரியலின் ரீமேக்காக இந்த சீரியல் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Share this story