குக்காக ப்ரமோட்டான சிவாங்கி.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி !

sivaangi

‘குக் வித் கோமாளி சீசன் 4’-ல் சிவாங்கி குக்காக களமிறங்கவுள்ளதாக வந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். 

பிக்பாஸ் நிறைவுபெற்றுள்ளதால் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி களைக்கட்ட தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 28-ஆம் தேதி கோலாகலமாக துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ப்ரோமோக்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. 

sivaangi

இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் உள்ளனர். வழக்கம் போல் விஜே ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த சீசனில் ஓட்டேரி சிவா, ஜிபி முத்து, சிவாங்கி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 

இந்நிலையில் வழக்கம் சிவாங்கி கோமாளியாக கலக்கி வருகிறார். ஆனால் இந்த சீசனில் அதற்கு மாறான குக்காக கலக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சிவாங்கி, வெளியான வதந்திகள் அனைத்தும் உண்மை தான் என்றும், தான் குக்காக இந்த சீசனில் ப்ரமோட்டாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனது புதிய பயணத்திற்கு உங்களின் ஆதரவு தேவை என்று கூறியுள்ளார். சிவாங்கி குக்காக களமிறங்குவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

Share this story