'குட்டி இளவரசி வந்திருக்கிறாள்' - பெண் குழந்தைக்கு தாயான சன் டிவி தொகுபாளினி !

diya

 பிரபல சன் டிவி தொகுப்பாளினியான தியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினி இருந்தவர் தியா. முன்னணி தொலைக்காட்சிகளான சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்டவைகளில் பல நிகழ்ச்சிளை தொகுத்து வழங்கியுள்ளார். சன் டிவியில் சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

diya

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் இருக்கும். அதனால் தான் இவர் ரசிகர்களை கவர்ந்து வைத்திருந்தார். புகழின் உச்சத்தில் இருந்த இவர், சிங்கப்பூரை சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் சிங்கப்பூரிலேயே செட்டிலாகிவிட்டார்.  

diya

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்பிறகு கர்ப்பகால புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தொகுப்பாளர் தியாவுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள அவர், எங்களுக்கு குட்டி இளவரசி பிறந்திருக்கிறாள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

Share this story