ரசிகர்கள் எதிர்பார்த்த விஷயம் நடக்கப்போகுது... கார்த்திக்கிடம் சவால் விட்ட சரஸ்வதி !

ThamizhumSaraswathiyum

தான் ப்ளஸ் டூ பாஸ் பண்ணுவதாக கார்த்திக்கிடம் சரஸ்வதி சவால் விடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'தமிழும் சரஸ்வதி' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளமானோர் ஆதரவளித்து வருகின்றனர். இதனால் புதிய வேகத்துடன் பரபரப்பு திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. படித்த பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் ஒரு சராசரி தாய்.‌ ஆனால் அதற்கு நேருக்கு மாறாக படிக்காத பெண் ஒருவர் எதிர்பாராத நிலையில் மருமகளாகிறார். 

ThamizhumSaraswathiyum

இதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களே இந்த சீரியல் கதையாக தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. தற்போதைய கதைப்படி சரஸ்வதி பொய் சொன்னதால் குடும்பத்தில் இருந்தும், கம்பெனி பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்படுகிறார் தமிழ். அதேநேரம் தனது கார்த்திக்கால் தனது கம்பெனியிலேயே அசிங்கப்படுத்தப்படுகிறார். 

ThamizhumSaraswathiyum

இந்நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற திருப்பத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் எம்.பி.ஏ படிக்கணும்னா முதல்ல ப்ளஸ் டூ படிக்கணும் என்று சரஸ்வதியை கார்த்திக் தரக்குறைவாக பேசுகிறார். இதனால் கோவமாகும் சரஸ்வதி, நான் ப்ளஸ் டூ பாஸ் பண்ணி காட்டுகிறேன் என்று சவால் விடும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. 


 

Share this story