‘டிக்கெட் டூ ஃபினாலே’... தட்டித்தூக்கிய போட்டியாளர் இவர்தான் !

biggboss

‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க்கில் வென்று இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளவர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் விக்ரமன், கதிரவன், ஷிவின், ரச்சிதா, மைனா நந்தினி, ஏடிகே, அமுதவாணன், அசீம் ஆகியோர் உள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் நாமினேஷில் உள்ள நிலையில் அடுத்த வாரம் ஒருவரும், அதற்கு அடுத்த வாரம் இரண்டு பேரும் வெளியேற உள்ளனர். மீதமுள்ள 4 பேர் இறுதிப்போட்டிக்கு செல்வார். 

biggboss

இதற்கிடையே இந்த வாரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் கொடுக்கப்படும் கோல்டன் டிக்கெட்டை வைத்து நாமினேஷில் இருந்து தப்பித்து விடலாம். அதனால் போட்டியாளர் அனைவரும் கடுமையாக விளையாடினர். 

biggboss

இதில் அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடி அமுதவாணன் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அமுதவாணனுக்கு நாமினேஷன் பிரச்சனை இல்லை. அதேநேரம் ஓப்பனிங் எல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா ஃபினிஷிங் சரியில்லை என்ற விருது அசீமுக்கு கொடுக்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story