விக்ரமனுக்கு ஓட்டுப்போடுங்க... திருமாவளவன் எம்.பி கோரிக்கை... இங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களா என கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் !

vikraman

விக்ரமனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ஓட்டு கேட்டது நெட்டிசன்களை கொந்தளிக்க செய்துள்ளது. 

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் வாரத்துடன் நிறைவுபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அசீன், விக்ரமன், அமுதவாணன், ஷிவின், மைனா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியாளராக உள்ளனர்.  ‌ நேற்று பண மூட்டையுடன் கதிர் பிக்பாஸ் விட்டை விட்டு வெளியேறி விட்டார். 

vikraman

இந்த சீசனில் யார் பிக்பாஸ் வெற்றியாளராக மாறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது வரை அசீம் மற்றும் விக்ரமன் இடையே கடும் போட்டி நிலை வருகிறது. வாரம் வாரம் அசீமிற்கு தான் அதிகப்படியான வாக்குகள் கிடைத்து வருகிறது. அதனால் அவர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரம் ஆரம்பம் முதலே நேர்மையாக விளையாடி வருவதால் அவருக்கும் அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

vikraman

இந்நிலையில் பிக்பாஸில் வெற்றி பெற விக்ரமுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள குற்றப் பதிவில் பிக் பாஸ் தேர்வுக்கான போட்டியில் விக்ரமுக்கு வாக்களிப்போம். அறம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல்வாதியாக இருக்கும் திருவாவளனுக்கு இதெல்லாம் தேவையா கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Share this story