திரைப்பிரபலங்களுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய கமல்... விஜய் டிவி வெளியிட்ட புதிய ப்ரோமோ !

vijay tv

உலக நாயகனின் பிறந்தநாளை கொண்டாடும் பிரபலங்களின் ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாக இருப்பவர் நடிகர் கமலஹாசன். பன்முக திறமைக் கொண்ட இவர், தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

vijay tv

இதற்கிடையே வரும் நவம்பர் 7-ஆம் தேதி உலக நாயகன் கமலஹாசன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி கமலை பிறந்தநாளை விஜய் டிவி பிரபலங்களுடன் கொண்டாடியுள்ளது. இது குறித்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

vijay tv

அதில் திரைப்பிரபலங்களான லோகேஷ் கனகராஜ், கேஎஸ் ரவிகுமார், நடிகை குஷ்பூ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர். அப்போது கமலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வந்த கமலை நடிகை குஷ்பூ பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியின் முழு தொகுப்பு வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

Share this story