‘குக் வித் கோமாளி 4’-ல் குக்காக களமிறங்கும் பிரபல நடிகர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் !

mime gopi

 ‘குக் வித் கோமாளி 4’ நிகழ்ச்சியில் குக்காக பிரபல நடிகர் ஒருவர் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் 4வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமான கொண்டாட்டத்துடன் இந்த சீசன் தொடங்கியது. 

mime gopi

இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் உள்ளனர். விஜே ரக்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகை சிருஷ்டி டாங்கே, ஆன்டின்னே நைவ்ரிகட், ஷெரின், ராஜ் ஐயப்பா, விஜே விஷால், காளையன், விசித்ரா, கிஷோர் ராஜ்குமார் ஆகியோர் குக்காக களமிறங்கியுள்ளனர். கோமாளிகளாக ஜிபி முத்து, பாலா உள்ளிட்டோர் கலக்கி வருகின்றனர். வழக்கமான கோமாளியாக களமிறங்கும் சிவாங்கி, இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். 

mime gopi

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக பிரபல நடிகர் மைம் கோபி கலந்துக்கொள்ளவுள்ளார். அவர் இந்த நிகழ்ச்சியில் குக்காக கலந்துக்கொள்வது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர், கதகளி, ஜீவி 2 உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

 

 

Share this story