பிக்பாஸ் சீசன் 5 தமிழில் 2-வது போட்டியாளராக நுழைந்துள்ள பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்!

raju-jeyamohan-34

நடிகர் ராஜூ ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5 தமிழில் இரண்டாவது போட்டியாளராக இணைந்துள்ளார்.  

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு பிக்பாஸ் சீசன் 5 தமிழ் இன்று துவங்கியுள்ளது. இந்த சீசனுக்காக புதிய செட் சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சீஸனின் முதல் போட்டியாளராக பிரபல கானா பாடகி இசைவாணி நுழைந்துள்ளார்.

raju jeyamohan

நடிகர் ராஜூ ஜெயமோகன், பிக் பாஸ் புகழ் கவினின் நண்பராக 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தில் நடித்துள்ளார். இவர் கனா காணும் காலங்கள்', 'கல்லுாரி சாலை', 'ஆண்டாள் அழகர்' மற்றும் 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்து வந்தார். 

தற்போது இவர் பிக்பாஸ் வீட்டின் இரண்டாவது போட்டியாளராக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story