மீண்டும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிகர் சதீஷ்.. அவரே கொடுத்த சூப்பர் அப்டேட் !

baakiyalakshmi gopi

 ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மீண்டும் நடிகர் சதிஷ் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. அதிரடி திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். அவரது கதாபாத்திற்கு சமீபத்திற்கு சமீபகாலமாக முக்கியத்துவம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. 

baakiyalakshmi gopi

இதையடுத்து நடிகர் சதீஷ், சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசிய அவர், சொல்லவே கஷ்டமாக இருந்தாலும், சொல்லித்தான் ஆகவேண்டும். நான் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேன். இன்னும் 15 எபிசோடுகள் மட்டும் நடிப்பேன். அதன்பிறகு விலகிவிடுவேன். என்னுடைய விலகலுக்கு பல காரணங்கள் உள்ளது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். 

நடிகர் சதீஷீற்கு பதில் பிரபல நடிகர் பிரித்விராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் நடிகர் சதீஷின் விலகலை ஏற்க மறுத்த ரசிகர்கள், அவர் சீரியலை விட்டு விலகக்கூடாது என்று அன்பு கட்டளையிட்டனர். இது குறித்து பல கருத்துக்களை ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் நடிகர் சதீஷ் மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலின் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தான் மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் இருப்பதை உறுதி செய்துள்ளார். சதீஷின் இந்த முடிவு ரசிகர்களை மகிழ்ச்சிடைய செய்துள்ளது. 

 

 

 

Share this story