அடுத்த சின்னத்திரை ஜோடி தயார்! –வைரல் புகைப்படம்.

photo

ரீல் ஜோடியா இருந்து ரியல் ஜோடியாக மாறிய பலர் உள்ளனர். அதேப்போல சினிமாதுறையில் இருக்கும் பலர் அதே துறையில் உள்ளவரை திருமணம் செய்துகொள்வதும் அதிகம் நடக்கிறது. இந்த வரிசையில் தற்போது சன்டிவி பிரலங்கள் இருவர் அடுத்து ஜோடியாக இணைய உள்ள தகவலை அறிவித்துள்ளனர்.

photo

சன்டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் கதாநாயகன் கார்த்தியின் நண்பனாக கிருஷ்ணா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமனவர் அரவிஷ். இவர் தற்போது அதே தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் அதே சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘திருமகள்’ தொடரின் கதாநயகியான ஹரிகா என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் விரைவில் நிச்சயம் நடக்க உள்ளது. இந்த தகவலை அவர்களே வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து பலரும் இந்த புது ஜோடிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

Share this story