சீரியலின் நாயகியான நடிகை ஜனனி.. எந்த சீரியல் தெரியுமா ?

janani ashok kumar
‘மௌன ராகம்’ சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார் புதிய சீரியல் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

 சின்னத்திரை பிரபல நடிகையாக இருப்பவர் ஜனனி அசோக்குமார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘மாப்பிள்ளை’ சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு விஜய் டிவியில் ‘மௌன ராகம்’, ‘மௌன ராகம் 2’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘ஆயுத எழுத்து‘, ‘காற்றுக்கென்ன வேலி‘ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். 

janani ashok kumar

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘செம்பருத்தி’ சீரியலில் நடித்துள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்களாக துணை நடிகையாக நடித்து அவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள ‘இதயம்’ சீரியல் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். 

ராஜாம்மாள் கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியலின் ஷூட்டிங் இன்று சென்னையில் தொடங்கியது. இந்த சீரியலை ‘திருமதி ஹிட்லர்’ சீரியலை இயக்கிய ராஜ்குமார் இயக்குகிறார். முதல்முறையாக ஹீரோயினாக ஜனனி நடித்துள்ள இந்த சீரியல் எப்போது ஒளிப்பரப்பாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  

Share this story