44வயதில் திருமணம் செய்துகொண்ட ’படையப்பா’ பட நடிகை – குவியும் வாழ்த்துகள்.

photo

90’ஸ் கிட்ஸ்களுக்கு பரிச்சயமான ஒரு முகம் லாவண்யா, இவர் பல திரைப்படங்கள், சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது  44 வயதாகும் நிலையில் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

படையப்பா, சூர்யவம்சம், சுயம்வரம், சங்கமம், ஜோடி, கண்ணுபட போகுதய்யா, தெனாலி, வில்லன், சுந்தரா ட்ராவல்ஸ், சமஸ்தானம், மிலிட்டரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். வெள்ளிதிரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல்கள் மூலமாக ஜொலித்து வருகிறார்.  அந்த வகையில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘அருவி’ தொடரில்  நடித்து வருகிறார்.  இவர் பிரசன்னா என்ற தொழிலதிபரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்.

photo

இவரது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில்; பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் பெரும்பாலும் பாசிட்டிவ் கேரக்டரிலேயே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

photo

 

Share this story