'பாவம் கணேசன்; சீரியலில் இணைந்த 'காற்றின் மொழி' நடிகை... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில் இருந்து நடிகை பிரியங்கா இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாவம் கணேசன். அதில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நவீன் கதாநாயகனாக நடிக்கிறார். அந்த சீரியலில் யமுனா கதாபாத்திரத்தில் ஷயீமா ரியால்தீன் என்பவர் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் சீரியலில் இருந்து விலகியுள்ளதால் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நடித்து வந்த பிரியங்கா புதிதாக இணைந்துள்ளார். .

இதை பிரியங்கா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "யமுனாவாக மீண்டும் வந்திருக்கிறேன். இரவு 10 மணிக்கு தவறாமல் பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியலில் எழிலரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்ற பிரியங்கா தற்போது பாவம் கணேசன் சீரியலில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இவர் 'காற்றின் மொழி' சீரியலிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

