‘ராஜா ராணி 2’ - ல் விலகிய நடிகை ரியா... திடீர் விலகலால் ரசிகர்கள் அதிர்ச்சி !

riya vishwanathan

‘ராஜா ராணி 2’ -ல் இருந்து நடிகை ரியா விலகியதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் 'ராஜா ராணி 2' சீரியல் விறுவிறுப்பாக  சென்றுக் கொண்டிருக்கிறது. ஏராளமான பார்வையாளர்களை கொண்ட இந்த சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு பரபரப்பாக நகர்ந்து வருகிறது.  இந்த சீரியலில் சந்தியா கேரக்டரில் ஆல்யா மானசாவும், சரவணன் கேரக்டரில் சித்துவும் முதலில் நடித்து வந்தனர். 

riya vishwanathan

ஆனால் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் ஆலியா மானசா, கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார்.  அதனால் அவருக்கு பதிலாக சென்னை மாடல் அழகியான நடிகை ரியா, புதிய சந்தியாவாக நடித்து வந்தார். துணிச்சல் மிக்க ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் ரியா நடித்து மிரட்டி வருகிறார். அவர் சீரியலுக்கு வந்த சில மாதங்களிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 

riya vishwanathan

இந்நிலையில் நடிகை ரியா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக நடிகை ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இத்தனை நாள் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனவும், இனி சந்தியாவாக வேறொருவர் நடிப்பார் என்றும் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story