சின்னத்திரை நடிகை ஸ்ருதி ஷண்முகபிரியாவின் கணவர் திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.

photo

சின்னத்திரை நடிகை ஸ்ருதி ஷண்முகபிரியாவின் கணவர் அரவிந்த மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

சின்னத்திரை சீரியல்களான நாதஸ்வரம், வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா என பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி. அதிலும் நாதஸ்வரம் சீரியல் மூலமாக எக்கசக்கமான ரசிகர்களை பெற்றார். தொடர்ந்து இவர் பிரபல பாடி பில்டர் அரவிந்தை திருமணம் செய்துகொண்டார்.  அரவிந்த்  பாடி பில்சர் என்பதை தாண்டி ஜிம் ட்ரெய்னராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அரவிந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

இந்த தகவல் சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள், பாலோயர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்த், ஸ்ருதி இருவரும் ஜோடிகளாக இணைந்து பல வீடியோக்கள், புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்தனர். தற்போது அதையெல்லாம் ஷேர் செய்து  ரசிகர்கள்  வேதனையையும், ஸ்ருதிக்கு ஆறுதலையும் பகிர்ந்து வருகின்றனர்.

Share this story