பிக்பாஸ் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் போலீசில் புகார்... விசாரணை வளைத்திற்கு வரும் விக்ரமன் ?

vikraman

காதலிப்பதாக ஏமாற்றியதாக பிக்பாஸ் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் சென்னை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

பிக் பாஸ் மூலம் பிரபலமான விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். அவர் மீது சென்னை பெருங்குடியை சேர்ந்த கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார்.‌ அதில் விக்ரமன் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டார். அதேபோன்று 15-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் ஏமாற்றியுள்ளார் என்று கூறி விக்ரமனுடன் வாட்ஸ்ஆப்பில பேசிய உரையாடல் ஸ்கிரீன் ஷாட்டுக்களை வெளியிட்டிருந்தார்.

இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விக்ரமன் தனது தரப்பு நியாயத்தை தெரிவித்திருந்தார். அதில் ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம உள்ளது போல் இந்த கதைக்கும் இரண்டு பக்கம் உள்ளது என்று காதல் கடிதங்களை வெளியிட்டிருந்தார். அதோடு அறம் வெல்லும் என்று குறிப்பிட்டிருந்தார். 

vikraman

 இதற்கு பதிலடியாக சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் விக்ரமன் மீது வழக்கறிஞர் கிருபா முனுசாமி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நானும் விக்ரமனும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்ததாகவும், தன்னை காதலிப்பதாக சொன்ன விக்ரமனிடம் சட்டப்பூர்வமாக திருமணம் செய்யலாம் என்று கேட்டேன்.  அதற்கு அவர் மறுத்து விட்டார். 

தன்னை காதலிப்பதாக கூறி 13.7 லட்சம் வாங்கியதாகவும், அதில் 12 லட்சம் கொடுத்துவிட்ட நிலையில் 1.7 லட்சம் தரவில்லை. அதேபோன்று அவர் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் சட்டபூர்வமாக நடவடிக்கை கூறி வழக்கறிஞர் கிருபா புகார் அளித்துள்ளார். 

இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அதனால் விரைவில் விக்ரமன் விசாரணை வலையத்திற்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூதாகரமாக வெடித்துள்ள இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

Share this story