“நான் ரொம்ப நல்ல பையன்” அசல் கோளாரின் பேச்சால் அதிர்ந்து போன ரசிகர்கள்.

photos

பிக்பாஸ் சீசன் 6 துவங்கி விறுவிறுப்பாக சென்ற நிலையில் இந்த சீசனில் ரசிகர்களால் வறுத்தெடுக்கப்பட்ட ஒரு போட்டியாளர் என்றால் அது அசல் கோளார் தான். பெண் போட்டியாளர்களின் முதுகு, கை, கால்,  முட்டி போன்ற இடங்களில் தடவுவது, கடிப்பது போன்று அசலின் இம்மாதிரியான செயல்கள் பலரையுமே முகம் சுழிக்கும் வைத்தது.

photos

இதனாலேயே இவர் மூன்றாவது வாரத்தில் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். இந்நிலையில் அசல் கோளார் முதல் முறையாக அளித்த பேட்டியில், பிக்பாஸ் வீட்டில் அவரின் செயல்கள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது:  ‘எனது குடும்பத்தினருடன் நான்  எப்படி இருப்பேனோ, அப்படி தான் பிக் பாஸ் வீட்டிலும் இருந்தேன். சமூக வலைதளத்தில் வருவதை போல் நான் தப்பான நோக்கத்துடன் நடந்துகொண்டிருந்தால் அது உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களுக்கே தெரிந்திருக்கும். அவர்கள் எப்படி என்னை அனுமதித்திருப்பார்கள்?

photos

பிக்பாஸ் வீட்டில் அத்தனை கேமராகள் இருக்கிறது. அதற்கு மத்தியில் இதுபோன்ற செயல்களில் வேண்டுமென்றே யாராவது ஈடுபடுவார்களா? , நான் தெரிந்து செய்யாத ஒரு விஷயத்தை பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக உள்ளது.

photos

உங்களுக்கு அது தவறாக தெரிந்திருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும் , இந்த குணத்தை நான் மாற்றி கொள்ள முயல்கிறேன்’ இவ்வாறு அசல் கோளார் கூறியுள்ளார்.

Share this story