பிரபல நடிகைக்கு பிறந்தநாள்.. க்யூட் வீடியோ வெளியிட்ட கணவர் !
சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். முதல் சீரியலே டாப் கிரியரில் சென்றதால் பிரபலமான சீரியல் நடிகையாக மாறினார்.

இதே சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு அய்லா சையத் என்ற பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ‘ராஜா ராணி 2’ சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார். இவர்களுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.

மீண்டும் ஆல்யா, எப்போது நடிப்பால் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆல்யா மானஸா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதோடு சஞ்சீவ் - ஆல்யா திருமண நாளும் இன்றுதான். இதை கொண்டாடும் வகையில் சுற்றுலா ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கு ஆல்யாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

