‘50 நாட்களில் 16 கிலோ எடை குறைக்கலாம்’- ‘ஆல்யா மானசா’ கொடுத்த டிப்ஸ்.

photo

நடன நிகழ்ச்சிகளில் அறிமுகமான ஆல்யா மானசா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலமாக செம்பாவாக மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த சமயத்தில் அதில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அடுத்த ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார். அந்த சமயத்தில் கர்பமாக இருந்ததால் சீரியலிலிருந்து விலகினார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

photo

கர்பமாக இருந்த சமயத்தில் குண்டாக இருந்த ஆல்யா பிரசவத்திற்கு பின்னர் உடல் எடையை சட்டென குறைத்து அனைவரையும் ஆச்சரிய பட வைத்தார். அதாவது கிட்டத்தட்ட 50 நாட்களில் 16 கிலோ எடை வரை குறைத்திருந்தார். தற்போது அது எப்படி சாத்தியம் என கூறியுள்ளார் ஆல்யா அதாவது கடுமையான உடற்பயிற்சி, ரன்னிங், வாக்கிங், டயட் மற்றும் காலையில் எழுந்து சீரக தண்ணீர் குடிப்பது என சில டிப்ஸ்களையும் கூறியுள்ளார்.

photo

Share this story