பிக்பாஸில் அமுதா எடுத்த முடிவு... ரசிகர்கள் அதிர்ச்சி !

bigboss

பிக்பாஸில் அமுதவாணன் எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவுபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் டைட்டிலை யார் தட்டி செல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் அசீம் மற்றும் விக்ரமன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்ட நிலையில் கடைசியாக அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன், கதிர், ஷிவின் ஆகிய 6 இருந்தனர். 

 bigboss

இந்த நிகழ்ச்சியின் கடைசி டாஸ்க்கான பணப்பை வைக்கப்பட்டது. 3 லட்சம் மதிப்புள்ள அந்த பணப்பையை யார் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கதிர் அதை கொண்டு பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனால் இறுதிப் போட்டியாளராக இருக்கும் 5 பேருக்கு இன்னொரு வாய்ப்பை பிக்பாஸ் கொடுத்தார். 

bigboss

அதன்படி பணப்பையை போன்று பணப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. அசீம் மற்றும் விக்ரமன் ஆகிய இருவரும் டைட்டில் வின்னர்‌ ரேஸில் இருந்ததால் பணப்பெட்டியை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. மீதமுள்ள மைனா, ஷிவின், அமுதவாணன் ஆகிய மூவரில் யார் அந்த பணப்பெட்டியை எடுப்பர் என்ற குழப்பம் ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அமுதவாணன் பணப்பெட்டியை பஸ்ஸர் அடித்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. 10 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டி கடைசியாக 13 லட்சம் வரை உயர்ந்தததாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிப்போட்டியில் இருந்த அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story