ரசிகர்களை மகிழ்விக்க வரும் ‘ஆனந்தராகம்’.. சன் டிவியின் புத்தம் புதிய மெகா தொடர் !
சன் டிவியில் விரைவில் ஒளிப்பரப்பாகும் ‘ஆனந்தராகம்’ சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள், தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் காலை முதல் இரவு வரை நாள் முழுக்க சீரியல்களை மட்டுமே சன் டிவி ஒளிப்பரப்பி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே கண்ணாண கண்ணே, ரோஜா, சுந்தரி, வானத்தை போல, கயல் உள்ளிட்ட சூப்பர் சீரியல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வரிசையில் தற்போது புதிதாக ஒளிப்பரப்பாகும் உள்ள மெகா தொடர் 'ஆனந்தராதம்'. இந்த சீரியலில் பிரபல சினிமா நடிகரான இளவரசு மற்றும் நடிகை விநோதினி வைத்தியநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒளிப்பரப்பாக உள்ள இந்த சீரியலில் அறிமுக நடிகை கதாநாயகியாக நடிக்கிறார்.
ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகி நடிக்கிறார். கதாநாயகிக்கு பெற்றோராக இளவரசு மற்றும் விநோதினி ஆகிய இருவர் நடிக்கின்றனர். ஒரு பெற்றோருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் ஈஸ்வரியை, ஊரே பாராட்டும் வகையில் வளர்த்து வருகின்றனர். இப்படி கதாநாயகியை சுற்றி நடக்கும் விஷயங்களை வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.