‘அன்பே வா’ சீரியலில் இருந்து விலகிய பிரபல வில்லி நடிகை.... ரசிகர்கள் அதிர்ச்சி !

anbe vaa serial actress

 ‘அன்பே வா’ சீரியலில் இருந்து பிரபல வில்லி நடிகை விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுப்புலட்சுமி. வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர், தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியலில் நடித்து வருகிறார். காதல் மற்றும் த்ரில்லர் சீரியலாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

anbe vaa serial actress

இந்த சீரியலில் டெல்னா டேவிஸ், விராட், கன்யா பாரதி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதுதவிர வில்லியாக ஷில்பா கதாபாத்திரத்தில் சுபலட்சுமி ரங்கன் மிரட்டி வருகிறார். இவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. 

anbe vaa serial actress

இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து சுபலட்சுமி, திடீரென விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஷில்பா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நித்யா ராஜ் இணைந்துள்ளார். இவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story