‘என் குழந்தையை என்னிடம் கொடுத்துவிடு’- கதறும் அர்னவ்.

photo

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘செவ்வந்தி’ தொடர் மூலமாக பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து இவர் அதே சீரியலில் தன்னிடம் நடித்த அர்னவ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். தொடர்ந்து தான் கர்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்தார்.  அதுமட்டுமல்லாமல் அர்னவ் தன்னுடன் ‘செல்லம்மா’ சீரியலில் ஒன்றாக நடிக்கும் அன்ஷிதாவுடன் நெரிக்க காட்டுவதாகவும், இதனால் என்னை கர்பிணி என்றும் பாராமல் அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார்.  இதனை தொடர்ந்து இரு தரப்பும் மாறிமாறி மீடியாவில் குற்றம் சாட்டினர். தனித்தனியே பிரிந்தும் வாழ்ந்தனர். இந்த நிலையில் திவ்யா தனக்கு பெண்குழந்தை பிறந்த செய்தியை வெளியிட்டார்.

photo

தற்போது அர்னவ் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவதுதிரும்ப திவ்யா கூட சேரனும் என்றெல்லாம் இல்லை. நிறைய கனவு கண்டேன். எனனோட திருமண வாழ்க்கைக்காக குடும்பத்தையே எதிர்த்துக் கல்யாணம் பண்ணினேன் ஆனால் அது  ஐந்து வருடத்திலேயே  முடிந்துவிட்டது. எனக்கு பெண் பிறந்துள்ளார்.ஆனால் என்னால் பார்க்க கூட முடியவில்லை. அவளால் என் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியா விட்டால் என்கிட்ட தந்தால் பார்த்துக் கொள்வேன் நல்ல அப்பாவாக. நான் என்  பொண்ணுடன் இருந்திருந்தால் குதா என்று பெயர் வைத்திருப்பேன். என்னால் என் பொண்ணை பார்க்க முடியவில்லை என்பது தான் ரொம்ப வருத்தமாக உள்ளது.”என கூறியுள்ளார்.

photo

Share this story