அசீமை வச்சி செய்யும் கமல்.. இதெல்லாம் உனக்கு தேவையா என கலாய்க்கும் நெட்டிசன்கள் !

biggboss

 அசீமை தொடர்ந்து கமல் வச்சி செய்து வருவதால் நெட்டிசன் அவரை கலாய்த்து வருகின்றனர். 

பிக்பாஸ் அசீம் செய்யும் ஒவ்வொரு வேலையும் பார்வையாளர்களை எரிச்சலடைய செய்துள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பொம்மை டாஸ்க்கில் ஷெரீனாவை தனலட்சுமி தள்ளிவிட்டதாக ஒரு டிராமா அரங்கேறியது. இதில் ஷெரீனாவிற்கு ஆதரவாக அசீம், மகேஸ்வரி, அசல் கோலார் ஆகியோர் நடந்துக் கொண்டனர். ஆனால் நான் தள்ளிவிட்டது நிரூபிக்கப்பட்டால் பிக்பாஸில் இருந்து வெளியேறுகிறேன் என்று தனலட்சுமி கூறினார். 

biggboss

இதையடுத்து யார் மீது தவறு என்று விளக்கும் விதமாக குறும்படம் போட்டுக் காட்டப்பட்டது. கடைசியாக அசீம் மீதுதான் தவறு என்று நிரூபிக்கப்பட்டது. இதனால் கடுப்பாக கமல் அசீமை வச்சி செய்து வருகிறார். கடந்த வாரம் முழுவதும் அசீமின் செயல்பாடுகள் சரி இல்லாததால் அதையெல்லாம் சுட்டிக்காட்சி பேசினார். 

biggboss

இந்நிலையில் இந்த வார டேஞ்சர் ஜோனில் அசீம், மகேஸ்வரி, அசல் கோலார் ஆகியோர் உள்ளனர். அதனால் அசீமுக்கு ரெட் கொடுக்கப்படும் அல்லது வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் எந்த தண்டனையும் கொடுக்காமல் கமல், அசீமை வச்சி செய்து வருகிறார். இரண்டாவது முறையாக அசீம் டேஞ்சர் ஜோனில் வந்து அசிங்கப்பட்டு சென்றுள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.   

 

Share this story