மருமகளுடன் ஆட்டம் போடும் பாக்யா... வைரலாகும் இன்ஸ்டா ரீல் வீடியோ !

baakyalakshmi

'பாக்யலட்சுமி' சீரியலில் நடிக்கும் சுசித்ரா மற்றும் ரித்திகா ஆகிய இருவரும் இணைந்து நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

 சின்னத்திரையில் 'பாக்கியலட்சுமி' சீரியல் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களை கவரும் வண்ணம் இந்த சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. கணவன் - மனைவியான கோபி மற்றும் பாக்கியா என்ற இரு கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 

1

கதைப்படி பாக்கியாவை  விட்டுவிட்டு கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வேறு வீட்டில் வசித்து வருகிறார். அதனால் தனது குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் முழு பொறுப்பு பாக்கியாவிடமே உள்ளது. தனது இளைய மகனான எழில் கணவனை இழந்த அமிர்தாவை காதலித்து வருகிறார். இது குடும்பத்தினருக்கு பிடிக்காத நிலையில் எழிலுக்கு வேறு திருமணம் செய்ய நினைக்கிறார்கள். ஆனால் தனது மகனுக்கு அமிர்தாவையே திருமணம் செய்து வைத்து பிடித்த வாழ்க்கை கொடுக்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் கோவத்தில் கொந்தளிக்கின்றனர். இப்படி பரபரப்பான கட்டத்தில் சீரியல் நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் 'பாக்யலட்சுமி' சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா இன்ஸ்டாகிராமில் ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுசித்ரா மற்று ரித்திகா ஆகிய இருவரும் நடனம் ஆடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

Share this story