முடிவை மாற்றிக் கொண்ட கோபி... ரசிகர்களுக்கு சொன்ன ஹாப்பி நியூஸ் !

baakiyalakshmi

 பாக்யலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ், தான் சீரியலில் இருந்து விலகவில்லை என்று கூறியுள்ளார். 

விஜய் டிவியில் இல்லத்தரசிகளின் கவனம் ஈர்த்த சீரியல் பாக்யலட்சுமி. தனி ஒரு பெண்ணாக கஷ்டப்படும் பாக்யலட்சுமி கதாபாத்திரத்தின் கதைதான் இந்த சீரியல். கோபிக்கு எதிராக துணிச்சலுடன் போராடும் பாக்யலட்சுமியால் தான் மிகவும் விறுவிறுப்புடன் இந்த சீரியல் சென்றுக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த சீரியல் டிஆர்பியிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகிறது. 

baakiyalakshmi

இந்த சீரியலில் சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த சீரியலின் சுவாரஸ்சியமான கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சதீஷ், திடீரென விலகுவதாக சமீபத்தில் வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

baakiyalakshmi

அதனால் சமூக வலைத்தளங்களில் கோபி விலகக்கூடாது என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளார். அதில் பாக்யலட்சுமி சீரியலிலிருந்து நான் விலகவில்லை என்றும், எனக்கு பிரச்சனை இருந்தது உண்மைதான். ஆனால் தற்போது பிரச்சனை தீர்ந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில்கள் கிடைத்துவிட்டது. அதனால் இனி உங்கள் கோபியாக பாக்யலட்சுமி சீரியலில் இனி பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

Share this story