‘பாக்யலட்சுமி’ சீரியலில் இருந்து விலகிய கோபி... திடீர் விலகலுக்கான காரணம் என்ன ?

baakiyalakshmi sathish

‘பாக்யலட்சுமி’ சீரியலில் இருந்து கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் திடீரென விலகியுள்ளார். 

இல்லத்தரசிகளின் பேவரைட் சீரியல்களில் ஒன்று ‘பாக்யலட்சுமி’. கணவனால் கைவிடப்படும் தனி ஒரு பெண், எப்படி தனது குடும்பத்தை கஷ்டப்பட்டு காப்பாற்றுகிறாள் என்பது தான் இந்த சீரியலின் கதை. இதில் கோபி கேரக்டரில் சதீஷூம், பாக்யா கேரக்டரில் சுசித்ராவும், ராதிகா கேரக்டரில் ரேஷ்மாவும் நடித்து வருகின்றனர். 

baakiyalakshmi sathish

விறுவிறுப்பான கதைக்களத்தில் சென்றுக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் சமீபத்தில் இணைந்த பிரபல சினிமா நடிகர் ரஞ்சித் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது வருகைக்கு பிறகு பாக்யாவும், ரஞ்சித்தும் நெருங்கி பழகுவது போன்று காட்சிகள் நகர்ந்து வருகிறது. இதற்கிடையே தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் கோபியால் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் பாக்யா தங்கியிருக்கும் வீட்டிற்கே ராதிகாவும் செல்கிறார். 

இந்நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகுவதாக கோபி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சதீஷ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சொல்லவே கஷ்டமாக இருந்தாலும், சொல்லித்தான் ஆகவேண்டும். நான் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேன். இன்னும் 15 எபிசோடுகள் மட்டும் நடிப்பேன். அதன்பிறகு விலகிவிடுவேன். என்னுடைய விலகுகலுக்கு பல காரணங்கள் உள்ளது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share this story