‘பாக்யலட்சுமி’ சீரியல் நடிகையிடம் சில்மிஷம்.. டென்ஷனாகி அவர் செய்த காரியம் !

divya ganesh

 பாக்யலட்சுமி சீரியல் நடிகையிடம் சில்மிஷம் செய்த நபருக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் பாக்யலட்சுமி. குடும்ப பின்னணி கொண்டு ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் இல்லத்தரசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். 

divya ganesh

இந்நிலையில் நடிகை திவ்யா கணேஷ் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் விமானம் பயணம் ஒன்றில் தனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார். ஒரு முறை ஐதராபாத்தில் இருக்கு விமானம் மூலம் வந்துக்கொண்டிருந்தேன். அப்போது என் மேல் ஏதோ ஓடுவது போல் இருந்தது. ஆனால் எழுந்து பார்த்தபோது எதுவுமே இல்லை. 

இதையடுத்து மீண்டும் அதே உணர்வு வந்தபோது பின் இருக்கும் ஒரு நபர் கை வைத்தது தெரிந்தது. உடனடியாக அந்த நபருக்கு பளார் என்று ஒன்று கொடுத்தேன். இதுபோன்று பல சம்பங்கள் பெண்களுக்கு நடக்கலாம். அவற்றை சகித்துக் கொண்டு கடந்து போகாமல், உடனடியாக தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினார். 

 

Share this story